இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு முறை பயணமாக சீனா செல்கிறார்

Facebook Cover V02

Ranil_Vikkiஇலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு முறை பயணமாக நாளை மறுநாள் (புதன்கிழமை) சீனா புறப்பட்டு செல்கிறார்.

அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது சீனா சார்பில் இலங்கையில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி பெறுவது குறித்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

மேலும் இலங்கை பிரதமரின் இந்த சீனப் பயணம் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக அமையும் என நம்பப்படுகிறது.

Share This Post

Post Comment