இன்ஸ்டாகிராமில் இணைந்தார் போப் ஆண்டவர்

Facebook Cover V02

pop_instagram_20புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பகிர்ந்துகொள்கிற வசதி கொண்ட இந்த இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலை தளம். இந்த சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வலைத்தளத்தை பயன் படுத்துகிறவர்களில் 75 சதவீதம் பேர் அமெரிக்கா அல்லாத பிற நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த வலைத்தளத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சேர்ந்து கணக்கு தொடங்கி உள்ளார். இது உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அவர் தனது முதல் புகைப்படத்தை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெளியிட்டார். அந்தப் படம், அவர் மண்டியிட்டு பிரார்த்தனை செய்வதாக அமைந்துள்ளது.

பிரான்சிஸ்கஸ் என்ற பெயரில் இணைந்துள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், அந்த புகைப்படத்துடன் ‘‘கடவுளின் கருணை, மென்மையுடன் நான் உங்களுடன் பேச விரும்புகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமூக வலைத்தளத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறிய அளவிலான வீடியோக்களையும் வெளியிடுவார் என தெரிய வருகிறது. இந்த வலைத்தளத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இணைந்த 12 மணி நேரத்தில் அவரை ஆதரித்து 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

Share This Post

Post Comment