இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி சுற்றுக்கான 4வது பயிற்சி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது.

ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி சுற்று, பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் வரும் ஜூன் 20 முதல் ஜூலை 5 வரை நடக்கிறது. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், போலந்து, பிரான்ஸ் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

இத்தொடருக்கு முன், ஒவ்வொரு அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடின. முதல் பயிற்சி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்திய இந்தியா, 2வது பயிற்சி போட்டியில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. பின் 3வது பயிற்சியில் அமெரிக்காவை தோற்கடித்த இந்தியா, 4வது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

அபாரமாக ஆடிய இந்திய அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் குர்பாஜ் சிங் (முதல் நிமிடம்), தேவிந்தர் சுனில் வால்மிகி (12வது), ஆகாஷ்தீப் சிங் (20வது) தலா ஒரு கோல் அடித்தனர்.

நாளை நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.






Related News

  • அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை – பிரான்ஸ் கண்டனம்
  • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
  • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *