அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார் ஓ. பன்னீர்செல்வம்

Thermo-Care-Heating

ops_1அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னை வந்தார். காலை 11.30 மணி அளவில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக போயஸ் கார்டன் இல்லத்திற்கு காரில் வந்தார். ஆனால் அப்போது அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிறகு திரும்பிச்சென்ற அவர் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் காரில் வந்தார். சந்திப்பதற்கான அனுமதியை அவர் முன்கூட்டியே பெற்று இருந்ததால் அவரது காரை பொலீசார் வழி மறிக்காமல், உள்ளே அனுமதித்தனர்.

பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை 45 நிமிடங்கள் சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் தன் மீது எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தன்னிலை விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

மாலை 6.45 மணி அளவில் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் திரும்பி சென்றார்.

முதலமைச்சரை நேற்று சந்தித்ததை தொடர்ந்து இன்று கட்சி அலுவலகத்திற்கு ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதனும் வந்துள்ளனர். சில தினங்களாக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஓ..பன்னீர் செலவம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொள்ளாமல் இருந்தது இங்கே  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ideal-image

Share This Post

Post Comment